கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் வறட்சியான ஜூன் மாதங்களில், இந்த ஆண்டின் ஜூன் மாதமும் இணைந்துள்ளது
கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் வறட்சியான ஜூன் மாதங்களில், இந்த ஆண்டின் ஜூன் மாதமும் இணைந்துள்ளது என்று வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் வழக்கமாக ஜூன் மாதங்களில் சராசியாக 151.1 மி.மீ அளவு மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஜூன் மாதத்தில் இதுவரை பெய்த மழையின் அளவு 97.9 மி.மீ மட்டுமே. 106 முதல் 112 மி.மீ அளவு மழைப்பொழிவுடன் இந்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1920ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளில் மட்டும் தான் இந்த குறைவான மழைப்பொழிவு இருந்துள்ளது. 2009-ம் ஆண்டு 85.7மி.மீ, 2014-ல் 95.4 மி.மீ, 1926ம் ஆண்டு 98.7 மி.மீ மற்றும் 102 மி.மீ அளவு ஜூன் மாதங்களில் மழை பெய்துள்ளது.
2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளின் ஜுன் மாதங்கள் எல் நினோவின் தாக்கத்தில் உள்ளன. இதன் காரணமாக கிழக்கு மற்றும் மத்திய பசுபிக் கடலின் பகுதிகளில் அசாதாரணமாக வெப்பம் அதிகரிப்பதால், அது காற்றின் சுழற்சி மற்றும் இந்திய பருவமழையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனினும் ஜூன் 30-க்கு பிறகு இந்தியாவின் மத்திய இந்தியா பகுதிகளில் அதிகளவிலான பருவமழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.