தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங்களுக்கு 392 பேர் மட்டுமே விண்ணப்பம்
தமிழகத்தில் 1,850 தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான இடங்களுக்கு வெறும் 392 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அரசால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 1,850 இடங்களுக்கு வெறும் 392 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2019-20ஆம் ஆண்டின் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, தகுதியான மாணவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்டன.
இந்தப் படிப்பில் சேருவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 விழுக்காடும், மற்ற பிரிவினருக்கு 45 விழுக்காடும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது.