580 பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., சாதனை
ஒரே நாளில் 580 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனம் வழங்கி டி.என்.பி.எஸ்.சி. சாதனை புரிந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக வேளாண் துறையில் உதவி வேளாண் அதிகாரி பதவியில் 580 காலியிடங்களுக்கு இந்த ஆண்டு ஏப். 7ல் தேர்வு நடத்தப்பட்டது; 4158 பேர் பங்கேற்றனர். அவர்களில் 797 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு நாட்கள் 'ஆன்லைனில்' சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் தரப்பட்டது.
பின் 797 பேருக்கும் சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. சான்றிதழ்களின் அசல் சரிபார்க்கப்பட்டு நேற்று ஒரே நாளில் தகுதி பெற்ற 580 பேர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.