ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்த முறைகேட்டை ஆராய உத்தரவு
சென்னை, ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடு புகார்களை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி, உயர் கல்வித்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, ஸ்ரேயா தாக்கல் செய்த மனு:தொடக்க கல்வி படிப்புக்கான பட்டய தேர்வு, ௨௦௧௮ ஜூனில் நடந்தது. ஒரு பாடத்தில், நான், ௫௩ மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். பின், அதை, ௪௬ ஆக குறைத்து விட்டனர். மறு மதிப்பீடுவிடைத்தாள் திருத்தத்தில், தவறு நடப்பதாக அறிந்து, மறு மதிப்பீடு கோரினேன். இதையடுத்து நடந்த மறு மதிப்பீட்டில், ௪௪ மதிப்பெண் ஆக குறைக்கப்பட்டது.மூன்று பேர் அடங்கிய குழு தான், மறு மதிப்பீடு செய்ய வேண்டும்; ஆனால், இரண்டு பேர் தான் விடைத்தாளை ஆய்வு செய்துள்ளனர்.எனவே, தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார் ஆஜரானார்.நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:மறுமதிப்பீட்டு குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், அதன் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமித்து, மனுதாரரின் விடைத்தாளை, மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ௧௫ நாட்களில் தேர்வு முடிவையும், தெரிவிக்க வேண்டும்.சந்தேகம்நான் இவ்வாறு உத்தரவை பிறப்பித்த பின், மூன்று உறுப்பினர்கள் குழு, மனுதாரரின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ததாகவும், அதில், ௪௪.௨௫ மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும், ஆவணங்களை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.வழக்கு நிலுவையில் இருக்கும் போது, எதற்காக மூன்று பேரை நியமித்து, விடைத்தாள் திருத்தப்பட்டது என, புரியவில்லை.இதனால், தேர்வு நடத்தும் விதம், விடைத்தாள் திருத்தும் விதம், சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்வுத்துறை நிர்வாகத்தில் தவறு இருக்கிறது; அது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற, மனுதாரரின் குற்றச்சாட்டில், அழுத்தம் இருப்பதாக கருதுகிறேன்.எனவே, விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு நடப்பதாக கூறிய புகார்களை, ஒரு குழுவை அமைத்து, உயர் கல்வித்துறை செயலர் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று மாதங்களில், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.