பாலிடெக்னிக் பாடத்திட்டம் மாறுகிறது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 30, 2019

பாலிடெக்னிக் பாடத்திட்டம் மாறுகிறது

பாலிடெக்னிக் பாடத்திட்டம் மாறுகிறது

சென்னை:பாலிடெக்னிக் கல்லுாரிகளில்

நடத்தப்படும், 'டிப்ளமா'இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.அதைத்தொடர்ந்து, பாலிடெக்னிக்குகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பிற்கான பாடத்திட்டத்தை மாற்றவும், உயர் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டிலும், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்

.தற்போது, பள்ளி கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு பாடத்திட்டம் மாறியுள்ளதால், முதற்கட்டமாக, பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இது, 2020 - 21ம் கல்வி ஆண்டில், அமலுக்கு வரும்.இரண்டாம் ஆண்டு, டிப்ளமா மாணவர்களுக்கு, 2021 - 22ம் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்.'நடப்பு கல்வி ஆண்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டமே தொடரும்' என, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

Post Top Ad