தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 30, 2019

தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு

தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு




மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது.

தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.

இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று தான் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி கூட்டமாக வசிக்கும் இநத் பட்டாம்பூச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே வசித்து வருகிறது. கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும். இந்த பட்டாம்பூச்சி அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொண்டவை ஆகும். இந்த தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு அர்த்தம் போர் வீரன் என்பதாகும்.

இது தொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக வனத்துறைமற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சிக்கு தமிழக அரசு சின்னம் அந்தஸ்து வழஙக அரசாணை வெளியிட்டுள்ளது-

இந்திய அளவில் பட்டாம்பூச்சிக்கு மாநில அளவிலான அங்கீகரிக்கும் 5வது மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா(ப்ளூ மோர்மன்), உத்தரகாண்ட்(காமன் பீகாக்), கர்நாடகா(சதர்ன் பேர்டு விங்ஸ்), கேரளா(மலபார் பேண்டட் பீகாக்) ஆகிய மாநிலங்கள் பட்டாம்பூச்சிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்கி உள்ளன.

Post Top Ad