உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்திய அணி, இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
பர்மிங்காம்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்திய அணி, இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
இங்கிலாந்தில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமின் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை விளையாடிய இங்கிலாந்து அணி 7 போட்டியில் 8 புள்ளிகள் மட்டும் பெற்று அரையிறுதி கூட உறுதியில்லாத நிலையில் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியாவை வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது. அதே வேளையில் இந்திய அணியும் வலுவாக உள்ளதால் தொடர்ந்து 6-வது வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாறியது இந்திய அணி ஜெர்சி.
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நீலநிற ‘ஜெர்சி’ பயன்படுத்துகிறது. இதே நிற ‘ஜெர்சி’யை இந்திய அணியும் பயன்படுத்துவதால் டி.வி.ஒளிபரப்பில் அதிக வித்தியாசம் தெரியாது. இதனால் இந்திய அணிக்கு ஆரஞ்ச் மற்றும் நீலம் கலந்த ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
பர்மிங்காமில் இன்று வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படும், வெப்பநிலை 17 முதல் 21 டிகிரி செல்சியாக இருக்கும், 5 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது