புதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு

புதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் ௩௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை ௩௧ வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவுவழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive