தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்.புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம்!!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக கே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் , 2 முறை சென்னை காவல் ஆணையராகவும் இருந்தவர். திரிபாதி தென்மண்டல ஐ.ஜி.சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தர திட்டங்களை செயல்படுத்தினார் ஆவார்.
புதிய தலைமை செயலாளர் சண்முகம் :
தமிழகத்தில் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம். வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்ற கே.சண்முகம்; 1985 ஜூன் 7-ம் தேதி அரசுப்பணியில் சேர்ந்தார்.
இவர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்தவர். அரசின் பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, நிதி நிலைமையை திறம்பட கையாண்டவர். நிதித்துறை செயலாளராக கடந்த 2010- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நிதி நெருக்கடி காலங்களில் திறமையாக செயல்பாடுகளால் அரசின் நிதிச்சுமையை குறைத்தவர். மேலும் திமுக அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துரையின் செயலராக தொடர்ந்து பொறுப்பு வகித்தவர் ஆவார்