பொறியியல் கலந்தாய்வு எப்போது ? அண்ணா பல்கலை தகவல்
இந்த வருடம் 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் சம வாய்ப்பு எண் கொடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன.
இதில் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்ற, இதற்கு தகுதியான ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 20 ஆம் வெளியானது.
இந்தநிலையில், சென்னையில் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி (ஜூலை 3) ஆம் தேதியில் தொடங்கி ஜூலை 28ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் வழியில் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுவதாக தெரிவித்த அவர் மாணவர்களுக்கான ஒதுக்கீடு பற்றிய தகவல் உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா குறிப்பிட்டார்.