ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர்கள்– பிரியாங்கா பேச்சு
பள்ளியில் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் மிகக் குறைவான மதிப்பூதியத்தை உபியில் ஆளும் பாஜக அரசு மேலும் குறைத்து கொடுமை இழைப்பதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாவது:
இளநிலை பள்ளி பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். அதுதான் விதிமுறை. ஆனால் அதையே குறைத்துள்ளது உ.பி.அரசு. குறைக்கப்பட்ட பிறகு இதுநாள்வரை ரூ.8,470 மாத ஊதியமாக வழங்கப்பட்டது. இப்போது அதுவும் குறைக்கப்பட்டு ரூ.7 ஆயிரம் மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் உபியில் ஆளும் பாஜக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுமையை செய்து வருகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி மாதம் ரூ.17 ஆயிரம் மதிப்பூதியமாவது வழங்குங்கள். ஆனால் சமீபத்தில் வழங்கப்பட்டுவந்த ரூ.8,470 மதிப்பூதியத்திலேயே கைவைத்து ஊதியத்தை குறைப்பதென்பது நியாயமற்றது. இந்த துரோகத்திற்கு உ.பி. அரசிடம் பதில் இருக்கிறதா?
இவ்வாறு பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்