விடைபெற்றார் கிரிஜா வைத்தியநாதன்..அடுத்த தலைமைச்செயலாளர் …..?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் இருந்தார். ஆனால் திடீரென 2016ல் தலைமைச் செயலக அலுவலகம் மற்றும் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் அதிரடியாக ராம மோகன ராவ் நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் வரும் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.
நாளை மற்றும் அதற்கடுத்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், கிரிஜா வைத்தியநாதனுக்கு இன்றே பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த தலைமை செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவர் 1985ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. முதலமைச்சர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர், நிதித்துறை செயலாளராக பணியாற்றி உள்ளார். விரைவில் அடுத்த தமிழக தலைமை செயலாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.