தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் – உயர்நீதிமன்றம் உறுதி
கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூவம், பக்கிங்ஹாம் உள்ளிட்ட மூன்று நீர்நிலைகளையும் பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரசின் அலட்சியப் போக்கால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் பாதிப்பை உண்டாக்கி விட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்கு தண்டனையாக 100 கோடி ரூபாயை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயலாளர் தலைமையில் கூடும் ஆலோசனைக் கூட்டம் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அடுத்த மூன்று மாதங்கள் கூற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த மறு சீரமைப்பு பணிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், நீரி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் கொண்ட குழு கண்காணிக்க வேண்டும் எனவும் மூன்று மாதத்திற்குள் இந்தக் குழு மறுசீரமைப்பு பணிகள் குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த நிலையில் அதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது
0 Comments:
Post a Comment