10 ஆம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் : ஒருவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் ஸ்ரீஹரி மற்றும் கப்பில் ராஜவேந்திரா ராவ் ஆகிய இருவருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக அப்பள்ளியில் கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு 8 மணிக்கு உணவு சாப்பிட சென்ற போது இருவரையும் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பள்ளி விடுதி அருகே மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஸ்ரீஹரி செய்வதறியாமல் அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையை கொண்டு ராஜவேந்திரா ராவை பலமாக தாக்கியுள்ளார்.
இதில் ராஜவேந்திரா ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அடுத்து அந்த பகுதி வழியே சென்ற ஆசிரியர் ஒருவர் மாணவன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்
. இதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவன் ஸ்ரீஹரியை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 10ம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி தாக்கியதில் சக மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment