மருத்துவ கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை - மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்
பொதுப்பிரிவுக்கான 4ம் நாள் மருத்துவ
கலந்தாய்வில் 1554 பேர் பங்கேற்கவில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 2176 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 622 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது. பங்கேற்ற 622 பேரில் 334 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டது. 287 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மருத்துவ இடங்கள் அனைத்தும் நிரம்பியது என்று கூறியதால் இன்று ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.