17B காரணத்திற்காக மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என தொ.க.துறை இயக்குநர் அறிவுறுத்தல்

17B காரணத்திற்காக மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என தொ.க.துறை இயக்குநர் அறிவுறுத்தல்

 


*17B காரணத்திற்காக மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என தொ.க.துறை இயக்குநர் அறிவுறுத்தல் – TNPTF பொதுச்செயலாளர்*


 


🔥
🛡 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 17(ஆ) நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதாக கோயமுத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கிளைகளில் இருந்து மாநில மையத்திற்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில மாவட்டங்களிலும் இதே நிலை இருப்பது மாநில மையத்தின் கவனத்திற்கு வந்தது.


🔥
🛡 பொது மாறுதல் கலந்தாய்வு 2019 தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையிலோ தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செயல்முறைகளிலோ இது குறித்த எவ்வித அறிவிப்பும் இடம்பெறாத சூழலில் ஒருசில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் தன்னிச்சையான எதேச்சதிகாரப் போக்கு தொடர்பாக,


🔥
🛡 இன்று (04.07.2019) மதிப்புமிகு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.


🔥
🛡 *17(ஆ) நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை ஏற்கக் கூடாதென எவ்வித அறிவிப்பும் தான் வழங்கவில்லை* என்றும் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு *இது குறித்து அறிவுறுத்துவதாகவும் மதிப்புமிகு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்* அவர்கள் தெரிவித்துள்ளார்.


🔥
🛡 17(ஆ) நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்களை மாவட்ட நிர்வாகிகள் உடன் நேரில் சந்தித்து இயக்குநரின் அறிவுறுத்தல் குறித்து தெரிவிக்க வேண்டுமாறும்,


🔥
🛡 அதையும் மீறி விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமான பதிலை பெற்று உடன் மாநில மையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமாறும் பிரச்சினைகளுக்குரிய மாவட்ட நிர்வாகிகளைத் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்


சென்னை.
04.07.2019


_தோழமையுடன்,_
*ச.மயில்*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive