குரூப் – 1 பிரதான தேர்வு இன்று தொடக்கம்
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் – 1 பிரதான தேர்வு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அரசு துறையில் காலியாக உள்ள துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி. – மாவட்ட பதிவாளர் உட்பட எட்டு பதவிககளில், 181 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் – 1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை தகுதி தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு இன்று தொடங்குகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் 95 அறைகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இன்று முதல், 14ம் தேதி வரை 3 நாட்கள் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment