பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று கிடைக்கும்

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று கிடைக்கும்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன் மாதம் நடந்த பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை, தனித்தேர்வர்கள் இன்று 18 ம் தேதி, மதியம் 2.00 மணி முதல் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, statement of marks HSE first year result_ june 2019 என தோன்றும் வாசகத்தினை, கிளிக் (click) செய்தால், தோன்றும் பக்கத்தில்தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தேர்வின் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவிற்கு வரும் 19 மற்றும் 22ம் தேதி ஆகிய இரு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம்செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive