பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 31, 2019

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்


தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத்தேர்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வெள்ளிக்கிழமை (ஆக.2) மற்றும் திங்கள்கிழமை (ஆக.5) ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். 

கட்டணம் எவ்வளவு?: மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205, மறுமதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது


Post Top Ad