தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் தற்போது மாணவர்கள மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிமுக படுத்த உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து கூறுகையில் மாணவர்கள் படிக்கும்போதே சரளமாக ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
இதற்கென தனியாக 2000 ஆங்கில வார்த்தைகளைத் தேர்வுசெய்து, மென்பொருள்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் இதனால் மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் ஆங்கிலம் பேசுவதற்கு பெரும் உதவியாக இருக்க கூடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்