அரசு ஊழியர் ஒருவர் 2-வது வீடு கட்ட வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியுமா ? மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி:
அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய பணிகள்) சட்டம் 1960-ன்படி அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டவோ, வாங்கவோ தனது வருங்கால வைப்பு நிதித்தொகையில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2-வது வீட்டுக்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.
இந்த சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் வீடு வாங்கவோ, கட்டவோ வருங்கால வைப்பு நிதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட மந்திரி, இதில் மற்றொரு வீட்டுக்காக 2-வது முறையாக பணம் எடுக்கும் வகையில் இந்த சட்டத்தை திருத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதிபட கூறினார்.