சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது!
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, சந்திரயான்-2 விண்கலத்தை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்தியாவின் மிகவும் கனமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த 15 ஆம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
ராக்கெட் ஏவ 56 நிமிடங்கள் 24 விநாடிகளுக்கு முன் ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கவுன்டவுன் நிறுத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.43 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று மாலை கவுட்டவுன் தொடங்கியது. இதையடுத்து சற்று முன் ராக்கெட் திட்டமிட்டபடி ஏவப்பட்டது.