அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 2 வருடம் போலீஸ் பயிற்சி - ராஜஸ்தான் அரசு முடிவு
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமைப்படுத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் பயிற்சி வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், நீண்ட காலமாக ஆளும் கட்சியாக இருந்த பாஜ தோல்வி அடைந்தது. புதிய முதல்வரான கெலாட், பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
அதில் ஒன்றாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். மாணவர்களை உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை உள்ளவர்களாக மாற்றவும், அடிப்படை சட்டங்கள் மற்றும் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த புதுமை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது
குறிப்பாக, இளம் வயதினர் அதிகளவு குற்றச் செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த, பள்ளி கல்வித் துறையும் காவல் துறையும் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி உள்ளன.
8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 வருடம் பயிற்சி அளிக்கப்படுகிறது