கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்
சாத்தூர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு சேர்க்கைக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நா.திலீப்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பில் சேர ஜூலை 31கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதிகபட்சமாக பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 1.6.2019 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில்லை. இந்த பயிற்சி வகுப்பு 36 வார காலங்கள் நடைபெறும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை, முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், பிஆர்சி டெப்போ எதிரில், எஸ்ஆர் நாயுடு நகர், சாத்தூர் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04562-260293, 97906 75728, 97883 61413 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.