தமிழக அரசு மானியம் வழங்காததால் நிதி நெருக்கடியில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, July 16, 2019

தமிழக அரசு மானியம் வழங்காததால் நிதி நெருக்கடியில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள்

தமிழக அரசு மானியம் வழங்காததால் நிதி நெருக்கடியில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள்

நிர்வாக மானியம், பள்ளி மானியங் களை அரசு வழங்காததால் தமிழ கத்தில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் 5,025 தொடக்கப் பள்ளிகள், 1,513 நடுநிலைப் பள்ளி கள் என 6,538 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு அரசு ஊதியம் வழங்கு கிறது. மேலும் இருக்கை, மேஜை, கரும்பலகை போன்ற தளவாடப் பொருட்கள் வாங்கவும், பள்ளிக்கு வெள்ளை அடித்தல், மின் கட்டணம், குடிநீர் ஏற்பாடு போன்றவைக்காக அரசு நிர்வாக மானியத்தை வழங்குகிறது.

 2 சதவீத நிர்வாக மானியம் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதி யத்தில் 2 சதவீதம் நிர்வாக மானிய மாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலமும் பள்ளி மானியமாக தொடக் கப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2014-க்கு பிறகு நிர்வாகம் மானியம் வழங்க வில்லை. அதேபோல் 2017-ல் இருந்து பள்ளி மானியத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.

இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பது கிடையாது. நிர்வாக மானியம், பள்ளி மானியம் மூலமே செலவழித்து வந்தோம். அதையும் நிறுத்தியதால் ஆசிரியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வசூலித்துச் செல வழிக்கிறோம். கடந்த காலங்களில்... கடந்த காலங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது குறிப்பிட்ட தொகை பள்ளிக்கு கிடைக்கும். அதை பள்ளி வளர்ச் சிக்கு செலவழித்தோம்.

தற்போது காலியிடங்களில் அரசு பள்ளி உபரி ஆசிரியர்களை நிரப்புகின்றனர். இதனால் கடுமையான நிதி நெருக்கடியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன என்றார். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பள்ளி மானியத்தை நிறுத்தியது அரசின் முடிவு. நிர்வாக மானியம் அரசிடம் இருந்து தாமதமாகத்தான் வருகிறது. வந்ததும் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" என்றார்.

Post Top Ad