ஒரே நாளில் அரசுப்பள்ளிக்கு 7.50 லட்ச ரூபாய்க்கு நன்கொடை அளித்து அசத்திய பெற்றோர்கள்* - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, July 15, 2019

ஒரே நாளில் அரசுப்பள்ளிக்கு 7.50 லட்ச ரூபாய்க்கு நன்கொடை அளித்து அசத்திய பெற்றோர்கள்*

ஒரே நாளில் அரசுப்பள்ளிக்கு 7.50 லட்ச ரூபாய்க்கு நன்கொடை அளித்து அசத்திய பெற்றோர்கள்*




சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் இன்று 15.07.2019 ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்குடி பியர்ல் சங்கமம் மற்றும் இராமனாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி இனணந்து காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது கல்வி வளர்ச்சி நாள் விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் கல்விச்சீர் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி தலைமையேற்று 4 வகுப்புகளில் திறனறி வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.

காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி துனண ஆளுநர் நாச்சியப்பன் , எழுத்தாளர் சிகரம் சதிஷ்குமார் , மற்றும் மகாராஜா ஆயில் மில் நிறுவனர் திரு. பெவின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.சாக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் கருப்பசாமி , யூத் சர்வீஸ் டைரக்டர் ரோட்டேரியன்.தனசேகரன் , காமராஜர் பள்ளியின் தாளாளர் திரு. பால்வண்ணன் , சாமி மெடிக்கல் சங்கர், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சந்திரசேகர் மற்றும் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத்தலைவர் திரு. சகாய செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன் முதலாக சர்வதேச தரச்சான்று பெற்ற பள்ளி என்னும் பள்ளியாக அறிவிக்கப்பட்டதற்கான சான்றிதழையும் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் வழங்கிப் பாராட்டினார்.

பெற்றோர்கள் பள்ளியின் தேவை அறிந்து இக்கல்வியாண்டில் வளாக கண்காணிப்பு கேமரா , பொது ஒலிப்பரப்பி அமைப்பு(ஸ்பீக்கர்), கணினி மேஜை, ஸ்மார்ட் போர்ட், புரொஜெக்டர், மின்விசிறி, சுவர் கடிகாரம், பிரிண்ட்ர், புளு டூத் ஸ்பீக்கர், சுழல் நாற்காலி, வகுப்பறை மேஜை, வகுப்பறை தடுப்பு, தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை போன்ற சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீராக வழங்கினார்கள். அப்பொருட்களை பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து பள்ளி வரை, மேள தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிலம்பம், யோகா மற்றும் சதுரங்கம் ஆகிய செயல்பாடுகளில் கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்ஸ் போன்ற சாதனைகளை படைத்த சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டேரியன் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார். நிக்ழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் உமா, விஜய லட்சுமி மற்றும் முத்துவேல்ராஜன் ஆகியோர் செய்திருந்தார்கள். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயகாந்தி மற்றும் மீனாட்சி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்,

Post Top Ad