தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசுஉதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவுஅமல்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதபணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய,பயோ மெட்ரிக் வருகைப்பதிவுஅமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில்தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள8,179 அரசு மற்றும் அரசு உதவிபெறும்நடுநிலைப்பள்ளிகளில், பயோ மெட்ரிக்வருகை பதிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதற்காக 413 வட்டார கல்விஅலுவலர்களுக்கு, கூரியர் மூலம்பயோமெட்ரிக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளது.இதனிடையே, இதனை பொருத்துவதுகுறித்தும், செயல்பாட்டிற்கு கொண்டுவருவதுகுறித்தும் பயிற்சியளிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக,கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது வழங்கப்படும் கருவிகளுக்கு,வட்டார கல்வி அலுவலர்கள் தங்களதுஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில், கணினிஇயக்க தெரிந்த பணியாளர்களைதேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக பயிற்சிவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சிமுடித்தவர்கள் ஏதேனும் ஓரிரு பள்ளிகளில்மட்டுமே பயோ மெட்ரிக் பொருத்தஉதவிபுரிவார்கள் இவ்வாறு அதிகாரிகள்தெரிவித்தனர்