ஆசிரியர்களுக்கு சுகமான சுமை!  பள்ளிகளில் தினமும் 'ஸ்லிப் டெஸ்ட்' .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப 'பெஸ்ட்!பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், 'ஸ்லிப் டெஸ்ட்' எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா வேலை என்றாலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உதவும் என்பதால், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு, வரவேற்பு அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கடந்த 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.இதன்படி, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, காலை 8:30 முதல் 9:15 மணி வரை, சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.மாலை, 4:30 முதல் 5:20 மணி வரை,தினந்தோறும் ஒரு பாடத்துக்கு, 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும்.இரண்டு நாட்களில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மாணவர்களுக்கு வழங்கி, பெற்றோரின் கையொப்பம் பெற வேண்டும். மதிப்பெண் பதிவேடு மற்றும் ஒவ்வொரு மாணவருக்குமான விடைத்தாள்களை, தனித்தனி கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, இப்புதிய திட்டம் உதவும் என்பதால், சற்று கூடுதல் பணி என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.சுகமான சுமைஆசிரியர் கண்ணன் கூறுகையில், ''பருவம், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுடன் பள்ளிகளில் மாதம், வாரத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தினத்தேர்வுகள் நடத்தி,கோப்புகளை பராமரிப்பது என்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. ஆனால், மாணவர்களுக்கு சிறந்த எழுத்துப் பயிற்சியாகவும், அன்றைய பாடங்களை உடனுக்குடன் படிக்கவும், ஸ்லிப் டெஸ்ட் எனப்படும் தினத்தேர்வுகள் உதவும்.தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, முதன்மை கல்வி அலுவலர் எடுத்துள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது,'' என்றார்.பள்ளி துவங்கியதிலிருந்து பாடங்கள் நடத்தப்பட்டாலும், தேர்வு சமயத்திலேதான் மொத்த பாடங்களையும் படிப்பேன். ஆனால், தினந்தோறும் தேர்வுகள், பெற்றோரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்ற கண்டிப்பால், தினமும் படிக்கிறேன். பொதுத்தேர்வில் மொத்தமாக படிப்பதால், ஏற்படும் சுமையை இது தவிர்க்கும். கோப்புகள் பராமரிப்பதன் மூலம் என் கற்றலை, நானே மதிப்பிட முடியும்.பிரேம்குமார் பிளஸ் 2 மாணவர். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 24, 2019

ஆசிரியர்களுக்கு சுகமான சுமை!  பள்ளிகளில் தினமும் 'ஸ்லிப் டெஸ்ட்' .. தேர்ச்சி அதிகரிக்க இது ரொம்ப 'பெஸ்ட்!பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், 'ஸ்லிப் டெஸ்ட்' எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா வேலை என்றாலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உதவும் என்பதால், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு, வரவேற்பு அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கடந்த 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.இதன்படி, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, காலை 8:30 முதல் 9:15 மணி வரை, சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.மாலை, 4:30 முதல் 5:20 மணி வரை,தினந்தோறும் ஒரு பாடத்துக்கு, 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும்.இரண்டு நாட்களில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மாணவர்களுக்கு வழங்கி, பெற்றோரின் கையொப்பம் பெற வேண்டும். மதிப்பெண் பதிவேடு மற்றும் ஒவ்வொரு மாணவருக்குமான விடைத்தாள்களை, தனித்தனி கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, இப்புதிய திட்டம் உதவும் என்பதால், சற்று கூடுதல் பணி என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.சுகமான சுமைஆசிரியர் கண்ணன் கூறுகையில், ''பருவம், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுடன் பள்ளிகளில் மாதம், வாரத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தினத்தேர்வுகள் நடத்தி,கோப்புகளை பராமரிப்பது என்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. ஆனால், மாணவர்களுக்கு சிறந்த எழுத்துப் பயிற்சியாகவும், அன்றைய பாடங்களை உடனுக்குடன் படிக்கவும், ஸ்லிப் டெஸ்ட் எனப்படும் தினத்தேர்வுகள் உதவும்.தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, முதன்மை கல்வி அலுவலர் எடுத்துள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது,'' என்றார்.பள்ளி துவங்கியதிலிருந்து பாடங்கள் நடத்தப்பட்டாலும், தேர்வு சமயத்திலேதான் மொத்த பாடங்களையும் படிப்பேன். ஆனால், தினந்தோறும் தேர்வுகள், பெற்றோரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்ற கண்டிப்பால், தினமும் படிக்கிறேன். பொதுத்தேர்வில் மொத்தமாக படிப்பதால், ஏற்படும் சுமையை இது தவிர்க்கும். கோப்புகள் பராமரிப்பதன் மூலம் என் கற்றலை, நானே மதிப்பிட முடியும்.பிரேம்குமார் பிளஸ் 2 மாணவர்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தினமும், 'ஸ்லிப் டெஸ்ட்' எனும் குட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. படித்த
பாடத்தில் உடனுக்குடன் தேர்வு நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது எக்ஸ்ட்ரா வேலை என்றாலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உதவும் என்பதால், ஆசிரியர்களும் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு, வரவேற்பு அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கடந்த 9ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.இதன்படி, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, காலை 8:30 முதல் 9:15 மணி வரை, சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.மாலை, 4:30 முதல் 5:20 மணி வரை,தினந்தோறும் ஒரு பாடத்துக்கு, 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும்.இரண்டு நாட்களில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மாணவர்களுக்கு வழங்கி, பெற்றோரின் கையொப்பம் பெற வேண்டும். மதிப்பெண் பதிவேடு மற்றும் ஒவ்வொரு மாணவருக்குமான விடைத்தாள்களை, தனித்தனி கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, இப்புதிய திட்டம் உதவும் என்பதால், சற்று கூடுதல் பணி என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.சுகமான சுமைஆசிரியர் கண்ணன் கூறுகையில், ''பருவம், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுடன் பள்ளிகளில் மாதம், வாரத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தினத்தேர்வுகள் நடத்தி,கோப்புகளை பராமரிப்பது என்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. ஆனால், மாணவர்களுக்கு சிறந்த எழுத்துப் பயிற்சியாகவும், அன்றைய பாடங்களை உடனுக்குடன் படிக்கவும், ஸ்லிப் டெஸ்ட் எனப்படும் தினத்தேர்வுகள் உதவும்.
தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, முதன்மை கல்வி அலுவலர் எடுத்துள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது,'' என்றார்.பள்ளி துவங்கியதிலிருந்து பாடங்கள் நடத்தப்பட்டாலும், தேர்வு சமயத்திலேதான் மொத்த பாடங்களையும் படிப்பேன். ஆனால், தினந்தோறும் தேர்வுகள், பெற்றோரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்ற கண்டிப்பால், தினமும் படிக்கிறேன். பொதுத்தேர்வில் மொத்தமாக படிப்பதால், ஏற்படும் சுமையை இது தவிர்க்கும். கோப்புகள் பராமரிப்பதன் மூலம் என் கற்றலை, நானே மதிப்பிட முடியும்.பிரேம்குமார் பிளஸ் 2 மாணவர்.

Post Top Ad