தேர்தல் பயிற்சிக்கு வராத 937 பேருக்கு, 'நோட்டீஸ்'
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராத, 937 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
வேலுார் லோக்சபா தேர்தல், ஆக., 5ல் நடக்கிறது. இதற்காக, 1,553 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தலில் பணியாற்ற, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 7,757 பேர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பயிற்சி முகாம், 14ல், ஆறு இடங்களில் நடந்தது. இதில், 937 பேர் பங்கேற்கவில்லை.
இதற்கு விளக்கம் கேட்டு, 937 பேருக்கும், கலெக்டர், சண்முகசுந்தரம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். அதில், 24 மணி நேரத்தில், விளக்கம் அளிக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு, அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால், பணியிட மாற்றம் செய்யப்படுவர் என, தேர்தல் அதிகாரிகள் கூறினர்.