Bio Metric Attendance System Implement In Education College s - கல்வியல் கல்லூரிகளில் பயோமெட்ரிக் கைரேகை பதிவு
கல்வியியல் கல்லூரி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை உறுதிசெய்யும் பொருட்டு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவி பொருத்தாத கல்லூரிகள் உடனடி யாக அந்த சாதனத்தை பொருத்த வேண்டும். கல்லூரிகள் பயோ- மெட்ரிக் கருவியின் வாயிலாக பதிவுசெய்யப்படும் வருகைப் பதிவு விவரத்தை வாரம் ஒருமுறை கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) வை.பாலகிருஷ்ணன், சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்