தமிழ் மொழி குறித்து தவறாக இருந்த பாடப்பகுதி நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, July 30, 2019

தமிழ் மொழி குறித்து தவறாக இருந்த பாடப்பகுதி நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ் மொழி குறித்து தவறாக இருந்த பாடப்பகுதி நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


தமிழ் மொழி குறித்து தவறான தகவல் இருக்கு பாடம் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் 12 ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலம் மொழி பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்று இருந்தது. அந்த பாடத்தில் தமிழ் மொழி 2300 ஆண்டுகள் தான் பழமையானது என்றும் தமிழை விட சமஸ்கிருதம் தான் தொன்மையான மொழி என்றும் கூறப்பட்டு இருந்தது.
உலகில் உள்ள மொழிகளுள் தமிழ் மொழி தான் தொன்மையானது ஆகும். சுமார் 5000 ஆண்டுகளுக்கு தமிழ் மொழி உருவாக்கிய சிறப்பு உடையது. ஆனால், பாடபுத்தகத்தி இருக்கும் தகவல் தவறானது என்று தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தவறாக பதிவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழ் மொழி குறித்த பாடம் முழுவதும் நீக்கப்படும் என்றும், இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு இருப்பதாகும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Post Top Ad