டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை: அமைச்சர் எம்.மணிகண்டன்
டிக்டாக் செயலியைத் தடை செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசும்போது, கலாசாரத்தைச் சீரழிக்கும் டிக்டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் எம்.மணிகண்டன் கூறியது: டிக்டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதை தடை செய்ய உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்றார்