புதிய உச்சம் தொட்டது தங்கம்
தங்கத்தின் விலை வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.26,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த 5-ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.26,552-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 11-ஆம் தேதி மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.26,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, ஏற்ற - இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 18) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.
பவுனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.26,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து, ரூ.3,332-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.43.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்து ரூ.43,800 ஆகவும் இருந்தது. இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்து, தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர்.
இதுதவிர, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதை நிலை நீடித்தால், விரைவில் பவுன் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்பு உள்ளது என்றார் அவர். வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):