குழந்தைகள்  மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்காக மொபைல் டி-அடிக்ஸன் தொடக்கம்

குழந்தைகள்  மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்காக மொபைல் டி-அடிக்ஸன் தொடக்கம்





Amritsar: பஞ்சாபில் உள்ள ஒரு மருத்துவமனை அமிர்தசரஸில் குழந்தைகள்  மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்காக மொபைல் டி-அடிக்ஸன் திறக்கப்பட்டடுள்ளது. இந்த மருத்துவமனையில்தான் பெண்களுக்கான போதை மருந்து பழக்கத்திலிருந்து மீட்பதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் தற்போது ஒரு மனநல மருத்துவர், இரண்டு மருந்தாளுநர்கள் மற்றும் 3 ஆலோசாகர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து நடத்துகின்றனர். தொடர்ந்து மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் நிலைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்றைய காலத்தில் மிகவும் அதிகளவில் அதிகரிக்கக்கூடிய விஷயமாக மொபைல் பயன்பாடு இருக்கிறது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நரம்பியல் உளவியல் மருத்துவர் டாக்டர் ஜாக் டீப் பால் பாட்டியா தெரிவித்தார்.

பெரும்பாலான இளைஞர்கள் மொபைல் மட்டும் பார்த்துக் கொண்டு நிஜ உலகில் தொடர்புகொள்வதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இளம் வயதிலேயே மன உளைச்சலுக்கு ஆளாகிறார் என்று தெரிவித்தார்.

மொபைல் போனை அதிகம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது. எங்களை சந்திக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றம் இருப்பதை பார்க்க முடிகிறது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களும் குழந்தைகளுடன் அதிகம் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் முன்பு  செல்போனை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்று கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive