டெபிட் கார்டு இல்லாமல் ஏ.எடி.எம்மில் பணம் எடுக்கலாம்! அட சூப்பர் திட்டமா இருக்கே.
hdfc cardless cash withdrawal :
இந்தியாவில் முதன்முதலாக பாரத ஸ்டேட் வங்கி, Cardless Withdrawl என்ற திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் கார்டு இல்லாமமே மொபைல் போன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 'யோனோ டிஜிட்டல் பேங்கிங்' (Yono Cash) என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் உள்ளிட்ட மற்ற வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த முறையை கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது எச்டிஎப்சி வங்கியும், கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளது. மேலும், எச்டிஎப்சி வாடிக்கையாளர்களாக இல்லாதவர்கள் கூட, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இணைந்து இந்த முறையை பயன்படுத்த முடியும்.
ஆனால், இது 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதற்கான வழிமுறைகள்: அப்பளை செய்த 5 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்! பர்சனல் லோனில் அசத்தும் எஸ்பிஐ
1. முதலில் ஹெச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் www.hdfcbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று, உள்நுழைய வேண்டும்.
2. பின்பு HDFC Bank NetBanking Request என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்
3. இப்போது Add a beneficiary என்பதை கிளிக் செய்ய வேண்டும்