அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவில் தமிழ் சேர்ப்பு!
ஆசிரியர்களின், 'பயோமெட்ரிக்' வருகை
பதிவு கருவியில் இடம்பெற்ற, ஹிந்தி நீக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில், தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்ய, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு அமலுக்கு வந்துள்ளது.
இதில், ஆசிரியர்களின் புகைப்படம், அவர்களின் பணி குறியீட்டு எண்ணுடன் கூடிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபரங்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன், தமிழ் விபரங்கள் நீக்கப்பட்டு, ஆங்கிலமும், ஹிந்தியுமாக மாற்றப்பட்டன. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் செயலருக்கு, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.இதையடுத்து, பள்ளிகளில் உள்ள, பயோமெட்ரிக் ஒருங்கிணைப்பு தளத்தில், இரண்டு நாட்களாக, மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.வருகை பதிவுகருவியில் இருந்த, ஹிந்தி மொழி விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில், மீண்டும் தமிழ் மொழியில் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.