புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு..
புதுக்கோட்டை,ஜீன்.30: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 58 வயது பூர்த்தி அடைந்து விட்டதால் ஜீன் 30 ஆம் தேதி ஒய்வு பெற்றார்.
எனவே புதியதாக கூடுதல் பொறுப்பேற்றுள்ள திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி அவர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பொறுப்பை ஒப்படைத்தார்.அவரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.