ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவசப் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
யு.பி.எஸ்.சி கீழ் நடைபெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச தங்குமிடத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணித் தேர்வுகளை எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 225 நபர்கள் தங்கி பயிற்சி பெற முடியும். இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் கட்டணங்கள் ஏதுமின்றி கிடைக்கும்.
இந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளாக பொறுப்பேற்று உள்ளார்கள். தற்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதன் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் வெற்றிபெறவர்கள் இந்த பயிற்சி மையத்திற்கு விண்ணப்பிக்கலாம். முதன்மை தேர்வுக்கு எங்கு படித்து இருந்தாலும், அடுத்த தேர்வுகளுக்கான பயிற்சியை இங்கு இருந்து பெற முடியும். இங்கு பயிற்சி பெற www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துக்கொள்ளலாம்.