கல்லூரிக்கே தேடிவரும் லைசன்ஸ்! மாணவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..
தமிழகம் முழுவதும் மாணவர்களை தேடி வந்து ஒட்டுநர் உரிமம் கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் பலரிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பதில்லை. குறிப்பாக மாணவர்களிடம் இருப்பதே இல்லை.
முறையாக வாகனம் ஓட்டி லைசன்ஸ் வாங்கு முன்னரே இவர்கள் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் போக்குவரத்து விதிகள் பற்றிய சரியான விழிப்புணர்வும் மாணவர்களிடம் இருப்பதில்லை. போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரவும் கல்லூரிகளுக்கே வந்து ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதன்மூலம் விபத்துக்கள் குறையும் என கூறப்படுகிறது. கல்லூரிகளில் சென்று லைசென்ஸ் வழங்கினாலும் மாணவர்கள் பைக்கை சரியாக கையாள்கிறார்களா என்பதை சோதித்த பின்பே வழங்கப்படும்