புதிய கல்வி கொள்கைக்கு கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ஆபத்து என அச்சம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, July 22, 2019

புதிய கல்வி கொள்கைக்கு கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ஆபத்து என அச்சம்!

சென்னை : மத்திய அரசு கொண்டுவர

உள்ள புதிய கல்வி கொள்கையால் ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு ஆபத்து ஏற்படும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு இது எதிராக உள்ளது என்பது அவர்களது கருத்து. மேலும் இது 69 சதவீத இட ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும் என போராடி வரும் நிலையில் புதிய கொள்கை மத்திய அரசின் பட்டியலுக்கே கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் பாதிக்கு இந்த புதிய கொள்கையை திரும்ப பெறாவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கருத்து :

பள்ளிக்கல்வி என்பது மத்திய - மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும்போது, மாநில நலன்களுக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த வரைவு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர் மேலும் இதனால் பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மாணவர்கள், இவர்கள் எல்லாருமே இனி உயர் கல்விக்கு போவதற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்  தெரிவித்துள்ளது.

Post Top Ad