வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா?


வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் படம், வீடியோ பாதுகாப்பானதா?


அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக தகவல் பரிமாற்ற அப்ஸ்களில் வாட்ஸ் அப் பயன்பாடு மிக அதிகம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட வாட்ஸ் அப்பில் தனி நபர்களிடையே தகவல் பரிமாற்றம் மிக எளிதாக இருக்கிறது. 

இதனால் ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாக வாட்ஸ் அப் இடம்பெற்றுள்ளது. இதில் தகவல் பரிமாற்றத்தை பாதுகாப்பானதாக ஆக்க வாட்ஸ் அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை அளிக்கிறது. இதனால், தகவலை அனுப்புபவர், பெறுபவர் தவிர மற்ற யாரும் இடையில் புகுந்து திருடிவிட முடியாது. ஆனாலும், இவ்வாறு வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், குறிப்பாக படங்கள், வீடியோக்களை ஹேக்கர்கள் திருடி விடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் வரும் படம், வீடியோக்களை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும் வரைதான் என்கிரிப்ஷன் பாதுகாப்பு இருக்கும். மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, போன் மெமரியில் அல்லது அதில் உள்ள மெமரி கார்டில் உள்ள படங்களை, வீடியோக்களை ஹேக்கர்கள் எளிதாக திருடி விடுகின்றனர். வாட்ஸ் அப்புக்கு மட்டுமல்ல, டெலிகிராம் அப்ஸ் மூலம் அனுப்பப்படும் படம், வீடியோக்களுக்கும் இதே கதிதான் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வாட்ஸ் அப், டெலிகிராம் பயனாளர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் படங்களை பார்க்க டவுன்லோடு செய்கின்றனர். இது மொபைல் போனிலேயே இருக்கும். இந்த போன்களில் ஹேக்கிங் செய்வதற்கு ஏற்ற அப்ஸ்களை நிறுவி விடுகின்றனர். 

இதன்மூலம் எளிதாக படங்கள், வீடியோக்களை ஹேக்கிங் செய்கின்றனர். இதை தடுக்க வாட்ஸ் அப் பயனாளர்கள், செட்டிங்கில், சாட், மீடியோ விசிபிளிடி என்பதை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதுபோல் டெலிகிராம் பயன்படுத்துவோர் சாட் செட்டிங்கில் சேவ் டூ கேலரி என்பதை ஆஃப் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி, கூகுள்பிளே ஸ்டோர் தவிர, ஏபிகே எனப்படும் அங்கீகாரமற்ற வெப்சைட்களில் இருந்து எந்த ஒரு ஆப்சையும் பதிவிறக்கம் செய்யவே கூடாது. இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive