பேசும் காக்கா,பறக்கும் கொக்கு செய்து அசத்திய மாணவர்கள்
ஒரிகாமி பயிற்சி
காகிதத்தில் கலைவண்ணம் செய்யும் பயிற்சி முகாம்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பேசும் காக்கா,பறக்கும் கொக்கு செய்யும் பயிற்சி நடைபெற்றது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தஞ்சாவூர் மாவட்டம் நக்கம்பாடியை சார்ந்த காகித கலை பயிற்சியாளர் தியாக சேகர் மாணவர்களுக்கு காகிதங்களை கொண்டு பூவாகவும்,தலையில் மாட்டிக்கொள்ளும் ஐந்து விதமான குல்லாக்களையும்,கழுத்தில் மாட்டி கொள்ளும் மாலைகளையும்,பறக்கும் கொக்கு,கிளி,பந்து ,பேசும் காகம்,கப்பல்,நட்சித்திர பெட்டி ,காகித காத்தாடி போன்றவற்றையும் செய்து காண்பித்தார்.மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளித்து செய்து காண்பிக்க வைத்தார்.பயிற்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.காகிதங்களையே கவிதையாக மாற்றும் கலைதான் ஓரிகாமி ஆகும்.மாணவர்கள் பிஷப் தொப்பி,நேரு தொப்பி,டிகிரி தொப்பி,போலீஸ் தொப்பி,முஸ்லிம் தொப்பி செய்து தலையில் மாட்டி மகிழ்ந்தனர் .பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பேசும் காக்கா,பறக்கும் கொக்கு உட்பட பல உருவங்களை காகிதத்தின் மூலம் தஞ்சை மாவட்டம் நக்கம்பாடியை சேர்ந்த தியாக சேகர் மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்