கையடக்க மொழிபெயர்ப்புக் கருவி  - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 18, 2019

கையடக்க மொழிபெயர்ப்புக் கருவி 

கையடக்க மொழிபெயர்ப்புக் கருவி 



ஒரு மொழிக்காரர் பேசியதை ஒரே வினாடியில் மொழிபெயர்த்து, இன்னொரு மொழிக்காரருக்குப் புரியும் வகையில் பேசிக்காட்டும் கருவிகள் சில வந்துவிட்டன. ஆனால், 'லாங்கோகோ' தயாரித்துள்ள 'ஜெனிசிஸ்' என்ற கையடக்க மொழிபெயர்ப்புக் கருவி, வல்லுனர்களை கவர்ந்துள்ளது.தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம் உட்பட, 100 மொழிகளில், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து, இனிய குரலில் பேசிக்காட்டுகிறது 

ஜெனிசிஸ். விமான நிலையத்துக்கு வழி கேட்பதிலிருந்து, அருகே நல்ல தங்கும் விடுதி, உணவகம் எங்கே இருக்கிறது என்பது வரை, சில வரிகள் முதல், பல பத்திகளுக்கு பேசி, அடுத்த மொழிக்காரருடன் எளிதில் கருத்துப் பரிமாற, லாங்கோகோ ஜெனிசிஸ் உதவுகிறது. 'வைபை' வசதி கொண்ட இந்தக் கருவிக்கு மூளையாக செயல்படுவது, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள். இதுவும், லாங்கோகோவின் மேகக் கணிய இணைப்பும் இந்தக் கருவியின் பன்மொழிப் புலமையை தொடர்ந்து மெருகேற்றியபடியே இருக்கும்.

சீன, கொரிய பேச்சு மொழிகளை சில பிழைகளுடனே மொழிபெயர்ப்பதாக விமர்சனம் இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து இந்தக் கருவியை பயன்படுத்தும்போது, அவரது பேச்சு நடைக்கு இக்கருவி பழகிக்கொள்ளும் என்பதால், மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும் என்கின்றனர் ஜெனிசிசை உருவாக்கியவர்கள்.

Post Top Ad