உள்ளே கருத்துக்கேட்பு; வெளியே பயிற்சி வகுப்பு :எதிர்ப்பை சமாளித்த கல்வித்துறை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 27, 2019

உள்ளே கருத்துக்கேட்பு; வெளியே பயிற்சி வகுப்பு :எதிர்ப்பை சமாளித்த கல்வித்துறை

உள்ளே கருத்துக்கேட்பு; வெளியே பயிற்சி வகுப்பு :எதிர்ப்பை சமாளித்த கல்வித்துறை


மதுரை டி.கல்லுப்பட்டியில் ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியருக்கான பணிமனை பயிற்சி நடந்ததாக கூறி, அவர்கள் கருத்துக்களை பெற்றதாக கல்வித்துறை மீது சர்ச்சை எழுந்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை (என்.இ.பி.,) குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் செய்ய வேண்டிய மாற்றம், ஆலோசனை குறித்து கல்வித்துறை சார்பில் சென்னை, திருச்சி, கோவையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கடைசியாக மதுரையில் நடத்த அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே நடந்த கூட்டங்களில் என்.இ.பி.,க்கு எதிராக சில மாணவர் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.இதனால் மதுரையில் ஆசிரியருக்கான பணிமனை பயிற்சி என்ற பெயரில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி டி.கல்லுப்பட்டி 'டயட்'டில் மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன (எஸ்.சி.இ.ஆர்.டி.,) இயக்குனர் முத்துபழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது.

இணை இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் ஒன்பது மாவட்ட 'டயட்' முதல்வர்கள் பங்கேற்றனர்.முற்றுகைஎன்.இ.பி., கூட்டம் நடப்பதை அறிந்த டி.ஒய்.எப்.ஐ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'டயட்' வாசல் முன் முற்றுகையிட்டு 'இது கருத்து கேட்பு கூட்டமா அல்லது பயிற்சியா என விளக்கம் அளிக்க வேண்டும்' என போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் உசிலம்பட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் எஸ்.சி.இ.ஆர்.டி., பேராசிரியர் ஜூலியஸ் 'இது மண்டல அளவிலான பணிமனை பயிற்சி தான்' என விளக்கம் அளித்தார். இதையடுத்து எதிர்ப்பாளர்கள் கலைந்து சென்றனர்.

கண்துடைப்பு கருத்துக் கேட்புபங்கேற்ற ஆசிரியர்கள் கூறியதாவது:

என்.இ.பி., குறித்த பேராசிரியர்கள் விளக்கினர். பின் டி.இ.ஓ., பி.இ.ஓ., தலைமையாசிரியர் அடங்கிய 10 குழுக்களாக பிரித்து தலா ஒரு தலைப்பு வீதம் என்.இ.பி., குறித்து கருத்து கேட்கப்பட்டது. குழு சார்பில் எழுதி தந்தோம். மாலை 5:00 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு காரணமாக பகல் 2:00 மணிக்கே கூட்டம் முடிந்தது.கருத்தை பதிவு செய்வதற்காக ஏனோ தானோ என கூட்டம் நடந்தது என்றனர்.


Post Top Ad