பள்ளிகளில் பிரார்த்தனை, விளையாட்டு நிகழ்ச்சிகளை வெயிலில் நடத்த வேண்டும்
காலை பிரார்த்தனை மற்றும் விளையாட்டு, கலை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இனி வகுப்பறையிலோ கலை அரங்கங்களிலோ நடத்தவேண்டாம் எனவும்அவை இனி வெட்டவெளியில் சூரிய வெளிச்சத்தில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு பள்ளிகளுக்கு உ.பி. அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த யோசனைக்குபின்னால் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்துக்கள் கிடைப்பதை ஊக்குவிக்கும் நோக்கமேஎன்று அரசு தெரிவித்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் ரிக்கெட்ஸ் (மென்மையான எலும்புகள் மற்றும் எலும்பு குறைபாடுகள்) போன்ற நோய்களைச் சமாளிக்க .சூரியனின் கீழ் அதிக உடல் செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து உபியில் இம்முறையை உடனடியாக அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அடிப்படைக் கல்விக்கான மாநில கூடுதல் இயக்குநர் லலிதா பிரதீப் தெரிவிக்கையில், "பள்ளிகள் இப்போது திறந்தவெளியில் கீழ் காலை பிரார்த்தனை மற்றும் பிற நடவடிக்கைகளை நடத்த வேண்டும். பெரும்பாலான கிராம பள்ளிகள் ஏற்கெனவே உள்ளன. நகர்ப்புறப் பள்ளிகளில் இவ்வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இத்தகைய பள்ளிகளில் காலை பிரார்த்தனை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி சத்து கிடைக்கும். இதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய கால்சிய குறைபாடு நோய்களிலிருந்து குழந்தைகள் காக்கப்படுவார்கள். அந்தந்த பள்ளிகளில் "சூரிய வெளிப்பாடு திட்டங்களை ஊக்குவிக்க அனைத்து 29 மாநிலங்களையும் ஏழு யூனியன் பிரதேசங்களையும் மத்திய மனித வள அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. வைட்டமின் டி இல்லாததால் ஏற்படும் நோய்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர் வராத வகுப்புகள் உள்ள நேரத்தில் மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்க வைக்கவும் அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு மாநில கூடுதல் கல்வி இயக்குநர் தெரிவித்தார். வளர்ந்து வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு, கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக எலும்பு சிதைவு ஏற்படுகிறது. இதனால் ரிக்கெட்ஸ்எனும் நோய்களினால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் குழந்தைகளுக்கு கடுமையான வளர்ச்சி பாதிப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளுக்கு வழிவகுக்கின்றன என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.