பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த அரசாணை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்
பிளாஸ்டிக் தடையை நீக்க வலியுறுத்தி பிளாஸ்டிக் உற்பத்தியாளார்கள் தொடர்ந்த வழக்கில், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த அரசாணை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இந்த தடையை நீக்க வலியுறுத்தி 70-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இன்று நடைபெற்ற இவ்வழக்கு மீதான விசாரணையில், பிளாஸ்டிக் தடை அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்ற நிறுவனங்களின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி, “சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு கொண்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும், பிளாஸ்டிக் தடைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும்” உத்தரவிட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment