கல்வி நிறுவனங்களின் சொத்தாக மாணவர்கள் விளங்க வேண்டும்
மதிப்புமிக்க எண்ணங்களை மனதில் கொண்டு கல்வி நிறுவனங்களின் சொத்தாக மாணவர்கள் விளங்க வேண்டும் என சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி தெரிவித்தார்
அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் அமிர்தா பொறியியல் கல்லூரி தொடக்க நிகழ்ச்சி சென்னை அடுத்த வெங்கலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனைத் துவக்கி வைத்த சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி கூறியது:
மாதா அமிர்தானந்தமயியின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மாதா அமிர்தானந்தமயி மடம் அனைத்து கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறது. மாணவர்களும் நல்லெண்ணங்களை அனைவரிடத்திலும் நிலைநிறுத்த வேண்டும்.
அனைவரும் சுயநலமின்றி பொதுநலத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உணர்ச்சியற்ற வகையில் செயல்படுபவர்கள் திருடனுக்குச் சமமானவர்கள்.
எனவே அனைவரிடமும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற உயர் மதிப்பு மிக்க எண்ணங்களை மனதில் கொண்டு மாணவர்களும் கல்வி நிறுவனங்களின் சொத்தாக விளங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் டெக்னாலஜி இன்னோவேஷன் அண்டு கே.எம்.மஹேந்திரா அண்டு மஹேந்திரா நிறுவனத் துணைத் தலைவர் சங்கர் எம் வேணுகோபால், டி.சி.எஸ் நிறுவனத்தின் டேலண்ட் அக்யுசிஷன் குழுமத் தலைவர் ஆர்.வாசுதேவன், அமிர்தா பொறியியல் கல்லூரி இயக்குநர் ராமநாதன், கல்லூரியின் முதல்வர் சங்கர், கல்லூரியின் தலைவர் சசாங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment