யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் கூட, உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, இஸ்ரோ மீது ஒரு “காண்டு” இருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளுள் ஒரு பிரதான காரணத்தை குறிப்பிட்டு கூறலாம்.
வகுக்கப்படும் பட்ஜெட்டில், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு என்றே பல கோடிக்கணக்கான டாலர்களை ஒதுக்கி, ஒரு பெரு நிறுவனம் போல் செயல்படும் உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு, பெரிய அளவிலான பட்ஜெட் எதுவும் ஒதுக்கப்படமால், கிடைக்கும் நிதியின் கீழ் (ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கும் செலவின் கீழ்) பிரம்மாண்டமான விண்வெளி ஆரய்ச்சிகளையும், வான்வெளி எல்லைகளை தொடும் இஸ்ரோவை பார்த்தால் “கடுப்பு” ஆகத்தானே செய்யும் மக்களே!
இஸ்ரோ அறிக்கை:
அந்த கடுப்பை இரட்டிப்பாக்க! இல்லை, இல்லை! பல மடங்குகளாக ஆக்கும் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோவின்) வருடாந்திர அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், இந்தியாவினால் மட்டுமே செய்யக்கூடிய சில முதன்மையான விண்வெளி திட்டங்களும் பட்டியலிடப்பட்டு உள்ளது. எந்தெந்த பணிகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து துல்லியமான தகவல் கிடைக்கபெறாவிட்டாலும் கூட, உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு “மூக்கு வேர்க்க வைக்கும்” அளவிலான போதுமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அப்படியாக அடுத்த அரை தசாப்தத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இஸ்ரோவின் ஐந்து தனித்துவமான விண்வெளி பயணங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
01. இஸ்ரோவின் சொந்த விண்வெளி நிலையம்:
ஆம், இஸ்ரோ தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முனைப்பின் கீழ் பணியாற்றி வருகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தற்போது தன் (உள் திட்டத்திற்காக) ரூ.10 கோடி நிதி உயர்வு கிடைத்துள்ளது. இந்த திட்டம் ‘ஸ்பேஸ் டாக்கிங் எக்ஸ்பிரிமெண்ட் (ஸ்பேஸ்டெக்ஸ் – SPADEX) என்று அழைக்கப்படுகிறது. சுற்றுவட்ட பாதையில் இரண்டு விண்கலங்கள் சந்திக்கும்போது, தன்னியக்கமாக டாக்கிங் செய்வதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் ஆகும். ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் உள்ள இரண்டு விண்கலங்களும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பி.எஸ்.எல்.வி ராக்கெட்ட் கொண்டு விண்வெளிக்குள் செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
02. சூரியனைப் “படிப்பதற்கான” முதல் திட்டம்:
இந்தியாவின் முதல் விண்வெளி தொலைநோக்கியான அஸ்ட்ரோசாட் ஆனது, உயர் ஆற்றல் கொண்ட அண்டப் பொருட்களை ஆராயும் திறன்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சூரியனை கண்காணிப்பதற்காகவே இஸ்ரோவினால் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த தொலைநோக்கி ஆனது, வருகிற 2020 ஆம் ஆண்டில் பி.எஸ்.எல்.வி எக்ஸ்எல் ராக்கெட்டில் ஏவப்படும் ஆதித்யா-எல் 1 மிஷனின் ஒரு பகுதி ஆகும். ஆதித்யா எல்1 விண்கலம் ஆனது சூரியனின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தைப் பற்றி ஆய்வு செய்ய உள்ளது என்பதும் அது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான முதல் லக்ராஜியன் புள்ளியில் (எல் 1) நிலை நிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது மேற்குறிப்பிட்ட புள்ளியில் இருந்தால் மட்டுமே குறைந்த “தீக்காயங்களுடன்” ஆதித்யா-எல் 1 விண்கலத்தால் தடையின்றி கவனிக்க முடியும். அதே நேரத்தில், சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரிய காற்றின் கதிர்வீச்சையும் ஒரே கட்டத்தில் அளவிட முடியும்.
03. ஸ்பெஷலைஸ்டு எக்ஸ்ரே ஆய்வகம்:
வருகிற 2021 ஆம் ஆண்டில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வழியாக எக்ஸ்ரே போலரிமெட்ரி சேட்டிலைட் (எக்ஸ்போசாட்) எனப்படும் மற்றொரு விண்வெளி அறிவியல் பணியை இஸ்ரோ தொடங்கவுள்ளது. ஆஸ்ட்ரோசாட் என்ற சுவிஸ் நாட்டின் இராணுவ சக்தியைப் போலல்லாமல், எக்ஸ்போசாட் ஒரு சிறப்புமிக்க அறிவியல் பணியாக இருக்கும். இது எக்ஸ்-கதிர்களின் துருவமுனைப்பை ஆராயும். அதன் மூலமாக விண்வெளியில் கதிர்வீச்சு எவ்வாறு துருவப்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தெளிவு உட்பட பல விடயங்களின் மீதான அறிவை நாம் பெறலாம். எக்ஸ்போசாட்டின் துருவமுனை கருவி ஆனது, ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளால் கட்டப்பட்டு சோதிக்கப்படுகிறது. இந்த திட்டமானது வானியற்பியல் பற்றிய அறிவில் மனிதகுலத்தின் இடைவெளிகளை நிரப்பும் ஒரு முக்கிய மிஷனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
04. வீனஸ் கிரக சுற்றுப்பாதைக்குள் செல்லும் இஸ்ரோ:
கடந்த ஆண்டு, இஸ்ரோ ஒரு வீனஸ் ஆர்பிட்டர் பணிக்கான பேலோட் திட்டங்களை 2023 இல் தொடங்க அழைப்பு விடுத்தது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திட்டம் ஆகும், ஏனென்றால் 1960 கள் மற்றும் 1970 களில் வீனஸ் கிரகத்தை ஆராய்வதற்காக நிலவிய ஆரம்பகால ஆர்வம் ஆனது செவ்வாய் கிரகத்தின் மீதான ஈர்ப்பால் மங்கியது. அதன் விளைவாக, தற்போது வீனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருக்கும் ஒரே ஒரு விண்கலமாக ஜப்பானின் அகாட்சுகி விண்கலம் திகழ்கிறது. ஆக இஸ்ரோ வீனஸுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவது உலகளாவிய கிரக அறிவியல் சமூகத்திற்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இஸ்ரோவின் வீனஸ் ஆர்பிட்டர் ஆனது 100 கிலோ எடையுள்ள ஒரு விண்கலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டும் நிசார்:
நிசார் எனப்படும் நாசா-இஸ்ரோ சின்தெட்டிக் அபெர்க்ஷர் ரேடார் செயற்கைக்கோள் தான், விண்ணுக்குள் பாயும் இரட்டை அதிர்வெண் ரேடார் இமேஜிங் அமைப்பைக் கொண்ட முதல் செயற்கைக்கோளாக இருக்கும். சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் என்கிற மதிப்பை கொண்ட இந்த செயற்கைகோள் தான் இதுவரை கட்டப்பட்ட மிக விலையுயர்ந்த பூமி-கண்காணிப்பு செயற்கைக்கோளாகவும் இருக்கலாம். திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில், வருகிற 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி எம்.கே II ராக்கெட்டின் முதுகில் ஏறி விண்வெளிக்குள் செல்லும். இதன் சிறப்பு அம்சமான இரட்டை அதிர்வெண் ரேடார் இமேஜிங் அமைப்பு ஆனது பூமியின் மேலோடு, துருவ பனி, காலநிலை செயல்முறைகள், உயிர்வளம் போன்றவற்றில் கவனம் செலுத்தி உலக அளவில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க உதவும். உடன் இந்த செயற்கைக்கோள் ஆனது பேரழிவு மேலாண்மைக்கும் பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment