அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு  - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, July 16, 2019

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு 

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு 



தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் ஆசிரியர்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. 

 இந்நிலையில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(தொழிற்கல்வி) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணை இணைத்து பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு நடைமுறைப்பட்டுள்ளது. 

இதில் ஒரு சில பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யவில்லை. அரசு முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதால், முதன்மை செயலாளர் தினசரி வருகைப்பதிவை இணையதள மூலம் ஆய்வு செய்து வருகிறார். எனவே அரசு மற்றும் நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணிபுரியவர்கள் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

Post Top Ad