அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு(UGC) உத்தரவிட்டுள்ளது. கல்லூரி, பல்கலையில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க ராகிங் தடுப்புக்குழு மற்றும் ராகிங் தடுப்ப படை அமைக்க வேண்டும் என்றும், ராகிங்கில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என அறிவிப்பு பலகை, சுற்றிக்கைகளில் தெரிவிக்க வேண்டும் எனவும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகிங் தடுப்புக்குழுவினர் வகுப்பறைகள், உணவகங்கள், மாணவர் கூடும் இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ராகிங் குறித்து www.ugc.ac.in, ww.antiragging.in, helpline@antiragging.in முகவரியில் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்